









fotoavdelingen, Sunnmørsposten
இந்த உலகுக்கும் எனக்கும் இடையேயான உறவு உக்கிரம் கொண்டு உருவேற, ஓர் உணர்வுப் பிரவாகத்துள் தோய்கிறேன். அது பச்சாதாபமா, பரிகாசமா தெரியாது. ஒன்று மட்டும் நிதர்சனமாய்த் தெரிகிறது. காணுமிடமெல்லாம் நம் வசமே எனக் கொண்ட போதிலும், எதுவும் எமதில்லை எனக் கொண்ட இவ்வுலகின் அகதி. தமயந்தியின் படங்களினு¡டாக வரும் பனிக்காற்றின் சிறகாய் இருந்தாலென்ன - உறை நதியின் அலையாய் இருந்தாலென்ன - மலைகளின் முலைகளாய் இருந்தாலென்ன - மரங்களின் ஓகஸ்ராவாய் இருந்தாலென்ன- அனைத்தின் அடியிலும் ஓலமிட்டு என் முகத்திலறைவது அகதி! அகதி!! அகதி!!! தமயந்தியின் புகைப்படங்கள் என் இதயக் கபாலங்களில் இப்படித்தான் சாளரங்களைத் திறக்கின்றன. காமரா - தானும் தான் காணும் காட்சிகளுக்குமிடையே தன்னையும் காட்சியையும் சேதப்படுத்தாமல் இரகசிய மெளனம் காத்து செயற்படுகிறது. தனது அகப்புற அனுபவ உணர்ச்சிகளில் தானியங்கி, காட்சிகளின் உயிரை மட்டுமே மெல்லக் கொய்து நம் தரிசனத்துக்கு வைத்துவிடுகிறது. அவரது கலை ஆளுமையின் அழகியல் நரம்புகள், அவர் ஏற்ற வடுக்களின் ரணங்களையும் சேர்த்தே வெளிப்படுத்துகின்றன.
வாழ்க்கை வழங்கும் அனுபவம், அனுபவம் வழங்கும் வாழ்க்கை - இவை புணரப் பிறந்த வாழ்வின் சாரமே இவர் புகைப்படங்கள். மனிதர்கள் அற்ற அவரின் பெரும்பாலான படங்கள் மனிதவாழ்வின் அவலத்தையும் ஆனந்தத்தையும் பேசுகின்றன. அதே சமயம் காலம் காலமாய் கட்டி வாழ்ந்த இந்த மக்கள் என்னோடு இயற்கையாய் இல்லை என்பதையும், ”நான் தனித்தே இருக்கிறேன்” என்பதை கூட்டுக்குரலாய் வெளிப்படுத்துகின்றன.
Borge Otterlei, journalist i Sunnmørsposten
Roger Engvik, gruppeleder i fotoavdelingen, Sunnmørsposten